தமிழ் இலக்கியம் என்பது முடிந்து போன ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது. இங்கு நல்ல எழுத்தாளர்களை விட அவர்களை விமர்சிப்பவர்களே அதிகம். அதிகமான சத்ததுடன் மலிவான பத்திரிக்கைகளில் விமர்சிப்பதே சிறந்த எழுத்தாளனக்கு அழகு என்பதையே கடை பிடித்துவரும் இவர்களின் இலக்கிய அறிவாற்றலால் தமிழ் இலக்கியம் உலக தரத்தை தாண்டி தமிழ் மக்களின் மனதில் கூட இடம் பிடிக்க மறுக்கிறது. விமர்சகர்கள் எப்பொழுது பொது தன்மையை விட்டு குழாயடி சண்டையில் இறங்குகிறார்களோ அன்றே அந்த மொழியின் வளர்ச்சி தடை பட்டு விடுகிறது. இங்க சாருவும், ஜெயமோகனும், ஞானியும் சண்டை போடுவதை பார்த்தால் தமிழில் படிப்பவர் கூட அதை நிறுத்தி விடுவார். இதற்க்கு நடுவே புகழ்ச்சி அரங்கங்கள். அவர்களை பொறுத்த வரை தமிழகத்தின் மிக சிறந்த இலக்கிய மேதைக்கு விழா எடுத்து அவரை புகழ்வதற்கே ஜென்மம் எடுத்ததாற் போல் பேச்சு வேறு.
அண்டை மாநிலங்கள் இலக்கியத்தில் உலக தரம் பார்க்க நாம் கீழே போயிக்கொண்டிருக்கிறோம். இவர்களை எல்லாம் இலக்கியவாதிகள் என்று சொல்லி கொண்டிருக்கும் நம்மை அடிக்க வேண்டும் செருப்பால். இதனால் தான் எங்கும் இல்லாத அளவுக்கு சமையல் பத்திரிக்கைகளும், மஞ்சள் பத்திரிக்கைகளும் இங்கே அதிகமாக விற்பனை ஆகின்றன. மொழியின் காவலர்களுக்கு அதை வைத்து அரசியல் பண்ணவே சமயம் போதவில்லை. இதில் எங்கே வளர்ச்சியும் மலர்ச்சியும்.